
திருகோணமலை அன்புவழிபுரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஓருவர் தமது வீட்டு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகிறது
மகேந்திரன் மயூரன் 24 வயது எனும் இளைஞன் இன்று 5ம் திகதி பகல் 2.30 மணியளவில் தமது வீட்டுக் கிணற்றில் குளிப்பதற்காக சென்ற போது தவறுதலாக கால் தடக்கி கிணற்றில் வீழ்ந்துள்ளார்.
தகவல் தெரிந்த குடும்பத்தார் மற்றும் கிராமத்தவர்கள் சுழியோகளின் உதவியுடன் இளைஞனை கிணற்றில் இருந்த மீட்டு திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி வைத்திய சாலையில் வைத்து உயரிழந்தள்ளார்.
உயிரிழந்த இளைஞன் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லுாரியின் பழைய மாணவரும் நரளை நாடளாவிய ரீதியாக வழங்க உள்ள கிராம சேவகர் நியமனம் பெற இருந்நதமையும் குறிப்பிட்த்தக்கது