திருமலை ஊடகவியலாளர் மாநாட்டில் மக்கள் பிரச்சினை பிரதி அமைச்சரிடம் முன்வைத்து தீர்வு பெறல்

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தேடலுக்கான பொது மையம் எனும் அரசசார நிறுவனத்தின் அனுசரனையுடன் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான சுகந்த புஞ்சி நிலமே அவரகளுடனான கலந்துரையாடல் நேற்று 12.03.2014 மாலை 6.30 மணியளவில் திருகோணமலை சர்வோதயம் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வடமலை ராஜ்குமார் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் மற்றும் பல அரச திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மாவட்டத்தில் வாழும் சகல இன மக்களும் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கேள்விகள் உள்ளடங்கிய ஆவணம் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு அதில் உள்ள சகல பிரச்சினைகளுக்கும் நியாயமான காரணங்களையும் தாம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் பல தீர்வுகள் தொடர்பாகவும் அமைச்சர் விளக்கினார். ஊடகவியலாளர்களுக்கும் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் புரிந்துணர்வும் நற்புறவையும் வழுப்படுத்தும் அவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெறவேண்டு மென ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டடேரிடம் கேட்டுக் கொண்டனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post