ஜெனீவா பிரேரனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலையில் ஆர்ப்பாட்டம்

ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவர உள்ள பிரேரனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை நகரின் மணிக்குண்டு கோபுர சுற்று வட்டத்தின் முன் இன்று 10 ம் திகதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்த்தை திருகோணமலை மாவட்ட ரனவீர குடும்பங்களுக்கான சங்கத்தினராலும் பிரஜைகள் அமைப்பு மற்றும் பௌத்த விகாரைகளின் மத குருமார் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வார்ப்பாட்த்தில் கிழக்கு மாகாணசபை தவிசாளர் ஆரியவதி கலபதி பல உள்ளுர் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தில் சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகண ஆளுனர் றியல் அட்மிரல் மொகான் விஜியவிக்கிரம அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் கையொப்பம் இடப்பட்ட ஜெனீவா தீர்மானத்திற்கு எதிர்பு தெரிவிக்கும் செய்தி அடங்கிய மனு ஒன்று வழங்ப்பட்டது.அம் மனுவினை தாம் இலங்கைக்கான அமெரிக்க துாதரகத்திற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும் அனுப்பி வைப்பதாகவும் ஆளுனர் தமது உரையில் தெரிவத்தார்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post