வரலாற்று சிறப்பு மிக்க தெட்சன கைலாயம் எனப் போற்றப்படும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் பெருமான் உடனுறை மாதுமை அம்பாள் சமேத வருடாந்த நகர்வல நிகழ்வானது இன்று 28ம் திகதி மாலை 5.00 மணியளவில் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது.
இதன் போது விசேட பூசைகளுடன் அடியார்களின் தோழில் சுமந்து திருக்கோணேஸ்வர மலையை விட்டு இறங்கி பிரட்றிக் கோட்டை வாசல் வழியாக எம் பெருமான் தம்பதி சமேதராக திருகோணமலை நகர மக்களுக்கு அருள் பாலிக்க நகர்வலமாக செல்லுவதையும் பக்தர்கள் சிதரு தேங்காய உடைத்து பெருமானை வழிபடுவதையும் நகரில் அமைக்கப்ட்ட அலங்காரம் ஒன்றினையும் படங்களில் காணலாம்.காட்சிகளை படங்களில் காணலாம.

