ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய அறிவை மேம்படுத்தி அவ் அறிவைப் பெற்றவர்களைப் பயன்படுத்தி
சமூகத்தில் ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்கு
நாட்கள் வதிவிடப் பயிற்சி நெறியோன்று தொண்டைமானாற்றில் அமைந்துள்ள
செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில்
நடத்தப்படவுள்ளது. அப் பயிற்சி நெறி தொடர்பான சில முக்கிய விபரங்கள் வருமாறு.
21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம். இலங்கையின் எல்லாப் பாகத்திலிருந்தும்
விண்ணப்பங்கள் பெறப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் சமய தீட்சை பெறுவதற்கும் பயிற்சி
வேளையில் வழங்கப்படும் தீட்சை பெற்ற அன்றிலிருந்து தொடர்ந்து 21 நாட்களுக்கு சைவ உணவு மட்டுமே
அருந்துவதற்கும் உறுதி கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். சைவ நெறிமுறையுடனான வாழ்விற்கான பலவிதமான
செய்முறை போதனைகளும் அடிப்படை யோகாசனப் பயிற்சிகளும் போதிக்கப்படும். பயிற்சி 14,15,16,17.09.2024. ஆம்
திகதிகளில் நடைபெறும் 16, 17 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்கள். பயிற்சி 14 ஆம் திகதி அதிகாலை 06
மணிக்கு ஆரம்பமாகும். தூர இடத்திலிருந்து வருபவர்கள் 13 ஆம் திகதி இரவு 8 மணிக்குள் சந்நிதியான்
ஆச்சிரமத்திற்கு வரவேண்டும். தங்குமிடமும் உணவும் பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இப் பயிற்சிக்கு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எமது வட்சப் இல.0760937448 இற்கு அழைத்து விண்ணப்பப் படிவத்தை பெறலாம்.
விண்ணப்பம் கிடைக்கவேண்டிய இறுதிநாள் 10.09.2024. பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் யாழ் குடா நாட்டிலுள்ள
பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு தல யாத்திரைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். இத் தகவலை அனைவரும்
தமது நண்பர்கள் உறவினர்களுக்கும் தெரிவித்து பயிற்சியில் கலந்து கொள்ள ஊக்குவிக்கும்படி சிவன் மானிட
மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்.
ஆன்மீகம் மற்றும் மானிட மேம்பாட்டுடன் தொடர்புடைய அறிவை மேம்படுத்தும் இலவச பயிற்சி - செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தில்
bytrinco mirrer
-
0