புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்கள் இலவசமாக வழங்கல்

(தம்பலகாமம் நிருபா்) - திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவர் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு மூதூர் கோட்டத்தில் உள்ள பாட்டாளி புரம், நீலாங்கேணி, இளக்கந்தை, நல்லூர் ஆகிய பின்தங்கிய ஊர்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் 1930 ரூபாய் மதிப்புள்ள ஆற்றல் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல்கள் 2024/06/05 அன்று திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் வழங்கப்பட்டது. இந்நூல்களை திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்க தலைவர் சண்முகம் குகதாசன், செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தன், பொருளாளர் இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post