திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிராந்திய பற்சுகாதாரப் பிரிவும் இனைந்து திருகோணமலை நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப்பகுதி மற்றும் சுகாதாரப் பிரிவு உழியர்களுக்கு இன்று புதன் கிழமை (27) காலை 7.00 மணிக்கு நகராட்சி மன்றத்தின் வேலைத்தளப் பகுதியில் வாய் புற்று நோயை தடுப்போம் என்ற கருப்பொருளில் கருத்தரக்கும் நடமாடும் சிகிச்சையும் இடம் பெற்றது.
இவ் நிகழ்வு பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் சமூக பல் வைத்தியநிபுணர் வைத்தியர் சசிதரன், திருகோணமலை பிராந்திய பல்வைத்திய நிபுணர் திருமதி. உதயலக்ஷ்மி சூரியகுமார், நடமாடும் பல் சிகிச்சை நிபுணர் வைத்தியர் கியாஸ் ஆகியோர் கருத்துரைகள் வழக்குவதையும் மேலும் இந் நிகழ்வில் திருகோணமலை பொது நூலகத்தின் நூலக உதவியாளர்களான அ . அச்சுதன், பா. விபூஷிதன், உ. ரஜனிக்காந் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வாய் புற்றுநோயை தடுப்போம் திருகோணமலையில் நடமாடும் சேவை..!
bytrinco mirrer
-
0