வெருகல் வெள்ள இடருதவி வழங்கல்

அண்மையில் வெருகலில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட 662 குடும்பங்களுக்குத் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் உலர் உணவுப் பொதிகள் 2024/01/05 ஆம் ஆகிய வழங்கப்பட்டன. திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு. சண்முகம் குகதாசன் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை சிவானந்தன் பொருளாளர் திரு.இராசரத்தினம் கோகுலதாசன் முதலியோர் இவற்றை வழங்கி வைத்தனர். வெருகல் பிரதேச செயலாளர் திரு. அனஸ் வெருகல் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் திரு.சுந்தரலிங்கம் மற்றும் உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த வழங்களுக்கான அனுசரணையைக் கனடாத் திருக்கோணமலை நலன்புரிச் சங்கம், கனடா மொன்றியல் திருமலை ஒன்றியம் ஆகியன வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post