மின்னல் தாக்கி இருவர் காயம்!


கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டுக்கச்சி பகுதியில் மின்னல் தாக்கியதில் தாயும் மகனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதுடன் ஆறு தென்னை மரங்கள் பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று (11.10.202) மாலை இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கச்சி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் அப்பகுதி வீடுகளிலிருந்த மின் உபகரணங்கள் சேதமாகி உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு மாதத்திற்கு முன்னரும் இப்பகுதியில் மின்னல் தாக்கத்தினால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது தாயும் மகனும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்திற்கு கிராம உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த சேவை பிரிவினர் சென்று பார்வையிட்டதாகவும் சேத விபரம் தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post