திருகோணமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


திருகோணமலை நிருபா்



திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  லொறி ஒன்றில் இருந்த நபர் மீது கார் ஒன்றில் வந்த இருவரால் இவ்வாறு  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறிமாபுர பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஹேந்தவித்தாரன செலின் குமார எனப்படும் தெல் குமார என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன் சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post