தம்பலகாமத்தில் இயற்கை விவசாய அறுவடை ; ஜனாதிபதி செயலக அதிகாரிகள் வருகை


ஜனாதிபதி செயலகத்தின் விசேட வேலைத்திட்டமான நஞ்சற்ற நாடு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் மூலோபாய தொழில்முயற்சி முகாமைத்துவ முகவரகத்தினால் திருகோணமலையில் முன் னெடுத்துவரும் இயற்கை உரத்தின் மூலம் மேற் கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று 24ம் திகதி காலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள பொற்கேனி கிராமத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் செம நிறுவத்தின் தலைவர் அசோகா அபயகுணவர்த்தன மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இக்கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் நித்தியானந்தம் என்பவரின் வயலில் மேற் கொள்ளப்பட்ட இயற்கை உரங்களின் மூலம் மேற் கொள்ளப்பட்ட ஒரு ஏக்கர் நெற் செய்கைக்கும் இரசாயண உரம் மூலம் மேற் கொள்ளப்பட்ட நெற்செய்கையையும் ஆராய்ந்ததில் தம்பலகாமம் பிரதேச செயலக புள்ளிவிபர உத்தியோகத்தரின் கருத்தின் படி இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்த ஒரு ஏக்கர் வயலில் இருந்து 155 புசல் நெல்லையும் இரசாயண உரம் பாவித்த ஒரு ஏக்கர் வயலில் இருந்து 90 புசல் நெல்லும் அறுவடை செய்யப்பட்டதாக  பிரதேச செயலாளர் தகவல் தெரிவித்தனர்.

இவ்வாறான இயற்கை முறையிலான விவசாய செய்கையை மேற்கொள்ள சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் விவசாய திணைக்களமும் ஆலோசனை வழங்கியதுடன் இயற்கை உரம் மற்றும் இயற்கை கிருமிநாசினி போன்றவற்றை சலுகை விலையில் வழங்கியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post