திருமலையில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை -2 பேருக்கு பிடியானை 7 பேருக்கு தண்டம்

திருகோணமலையில் டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்பாட்டில் போது நேற்று (24) வழக்கு தாக்கல் செய்யப்ட்டவர்களுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதி மன்ற தீர்ப்பின் படி ஏழு பேருக்கு தண்டம் இருவருக்கு பிடியானை பிறப்பிக்கப்ட்டுள்ளது. திருகோணமலை கிரீன்வீதியில் மேற் கொள்ளபட்ட டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் செயற்பாடானது இடம் பெற்று வருகின்ற சந்தரப்பத்தில் கடந்த 20ம் திகதி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கண்டு பிடிக்கபட்ட டெங்கு நுளம்பு குடம்பிகள் இருந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.என கிழக்கு மாகாண பொது சுகாதார போதனா ஆசிரியர் சபாபதி.சந்திரகுமார் தெரிவித்தார். அவர் தொடரந்து கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சகாதார பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் செல்வராஜா உதயகுமார் அவர்களால் குற்றவியல் சட்டக் கோவையின் 262ம் பிரிவுக்கு அமைய இந்த வழக்கு தாக்கல் செய்யப்படதாக தெரிவித்தார். மேலும் திருகோணமலையில் கடந்த காலங்களில் பொலிசாரினாலேயே இவ்வாறான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.முதன் முறையாக நேற்று பொது சுகாதார பரிசோதகரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post