திருக்கோணமலையில் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து, பாடசாலைகளில் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது..
இத்தகைய நேரத்தில் அவர்களுக்கு அவசர உதவிகள் சில தேவைப்படுகின்றன .
தற்போது தம்பலகாமம் பகுதியில் 200 குடும்பங்கள் இடம்பெயர்ந்து, 92 குடும்பங்கள் தி/ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்திலும் 96 குடும்பங்கள் உறவினர் வீடுகளிலும் இருப்பதாக அறிய முடிகிறது.. தற்பொழுதும் பாதிக்க பட்ட மக்கள் பாடசாலைக்கு வந்து கிராம சேவகர்களிடம் பதிந்த வண்ணம் இருக்கின்றார்கள்.
இங்கு தொடர்ந்தும் மழை நீடித்தால் வேறு பல பகுதி மக்களும் இடம்பெயர வேண்டிய நிலை வரலாம்.. தற்போது தி/ஆதி கோணேஸ்வரா வித்தியாலயத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அவசர உதவிகளாக உணவு, பாய், குழந்தைகளுக்கான பால்மா வகைகள் என்பன தேவைபடுவதாக அறிகிறோம்.
பாடசாலையில் இருக்கும் மக்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் நேரடியாக சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டதோடு, பாடசாலையில் தங்கியிருக்கும் மக்களையும் சென்று பார்வையிட்டு கிராம சேவகர்களிடமும் பிரதேச செயளாலரிடமும் கலந்துரையாடி மக்களுக்கான தேவைகளை கேட்டறிந்தார்.