திருகோணமலை நிலாவெளி வீதியில் இடம் பெற்ற விபத்தில் சிக்கிய 63 வயதுடைய எகேட் கரீட்டாஸ் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்த செல்லத்துரை மரியதாஸ் மரணமடைந்துள்ளர்.
நேற்று சனிக்கிழமை 20.12.2014 மாலை தாம் பணிக்காக திருகோணமலையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அவருக்கு பின்புறமாக வந்த டபுல் கெப் வாகனம் மோதுண்டதால் ஏற்பட்ட விபத்திலேயெ தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை பாலையூற்றை வசிப்பிடமாக கொண்ட இவர் மட்டக்களப்பு இருதயபுரத்தை தமது செந்த இடமாக கொண்டள்ளார்.இவரை மோதுண்ட வாகன சாரதி வாகனத்துடன் நிறுத்தாது இவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவரை உப்புவெளி பொலீசார் தேடும் நடவடிக்கையுடன் மேலதிக விசாரனையையும் நடாத்தி வருகின்றார்கள்.சந்தேக நபர் திருகோணமலை மட்கோ பகுதியை சேர்ந்தவர் எனவும் இவர் மது போதையில் வாகனம் செலுத்தியிருக்க கூடும் எனவும் பொலீசார் சந்தேகிப்பதாகவும் தெரியவருகிறது.மேலும் சம்பவம் இடம் பெற்ற இடம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ்நிலையத்திற்கு அருகாமையில் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்த இடத்திற்கு சென்று மரண விசாரனையை நடாத்திய திருகோணமலை நீதி மன்ற பதில் நீதவான் தி.திருச்செந்தில்நாதன் பிரேத பரிசோதனையை நடாத்துமாறு வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை அவருடைய மனைவியிடம் கையளிக்குமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.