திருகோணமலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவான கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு தொண்டர்களுக்கான தெளிவு படுத்தல் செயலமர்வு அன்று 17.12.2014 புதன் கிழமை காலை 10 மணியளவில் திருகோணமலை பட்டினமும் கூழலும் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் எனும் ஜனநாயக செயற்பாட்டு அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் மனாஸ் மாக்கீன் மற்றும் திருகோணமலை அமைப்பாளர் ஆர்.எம்.ராபில் மற்றும் ஆசிரியர் ஆர்.பைசல் விழுது நிறுவனத்தின் அலுவலர் வ.ராஜ்குமாா் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கு பொது மக்களின் கடமைகள் என்ன தேர்தல் தொடர்பான சட்ட விதி முறைகளை மீறும் தரப்பக்கள் சம்மந்தமான தகவல்களை எவ்வாறு கண்காணிப்பு குழுக்களுக்கு பரிமாறுவது.போன்ற விடயங்களும் தெளிவு படுத்தப்பட்து.
மேலும் பல மாவட்டங்களில் இடம் பெற்று வருகின்ற தேர்தல் வன்முறைகள் தொடர்பாக விபரிக்கபட்டதுடன் திருகோணமலையில் சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.
திருமலையில் கபே தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கான அமர்வு..
byRajkumar
-
0