திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பட்டினமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபையானது தமது 2015ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சபையில் நிறைவேற்றியது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்தில் உள்ள இப்பிரதேச சபையானது சுமார் ஏழு கோடி ரூபாய் பெறுமதியான தமது வரவு செலவு திட்டத்தை சபையில் கடந்த வாரம் முன்வைத்த போது இவ் வரவு செலவு திட்டத்தை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் உப தவிசாளரான இராசையா நிசாந்தன் முன் மொழிய ஐக்கய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர்ஆர்.ஏ.பி.ரெட்ணாயக்க வழி மொழிந்திருந்தார்.
நிறைவேற்றபட்டள்ள 2015 ம் ஆண்டுக்கான இவ் வரவு செலவு திட்டத்தின் மூலம் வீதிகள் வடிகான்கள் மைதானங்கள் மயானங்கள் போன்றவை அபிவிருத்தி செய்யப்ட உள்ளது என பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் அர்.விஜேந்திரன் தெரிவித்தார்.
உப்புவெளி பிரதேச சபையின் 2015 கான வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்
byRajkumar
-
0