யுத்தத்தின் பின் மீள் குடியேற்றயேற்றப் பட்டுள்ள மூதூர் கிழக்கு மக்களுடைய உற்பத்தியிற்கு சிறந்த சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தம் நோக்கில் திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் சுவீடன் கூட்டறவு நிறுவன நிதி உதவியின் ஊடாக கூட்டறவு சங்கங்களை வலுவூட்டி அதன் மூலம் மாபெறும் கண்காட்சி நிகழ்வு ஒன்றினை திருகோணமலை மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் பொதுச்சந்தை வளாகத்தில் 05ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு 07ம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
இதன் ஆரம்பநிகழ்வின் போது பிரதம விருந்தினரான கிழக்கு மாகாண கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி ராஜினி கணேசப்பிள்ளை அவர்களால் நாடாவெட்டுவதையும் அருகில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் டி.மயூரன் அவர்களையும் கட்டைப்பரிச்சான் இராணுவ முகாம் அதிகாரி ரணதிலக திருகோணமலை மாவட்ட வர்த்தக சம்மேளனத் தலைவர் வ.கலைச்செல்வன் அகம் நிறுவன இணைப்பாளர் க.லவகுகராஜா மற்றும் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் வ.ராஜ்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தினூடாக மூதூர் இத்திக்குளம் இளக்கந்தை நவரெட்ணபுரம் ஆகிய கிராம கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்தியதுடன் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள அணைத்து கிராமிய அமைப்புக்களின் உற்பத்திப் பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டதுடன் விற்பனையும் இடம் பெற்றமையை குறிப்பிடத்தக்கது.