பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைின் வாழ்வாதாரத்தை மேம்மடுத்துவதற்கான பிரத்தியோக திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடமோ மாகாண சபைகளிடமோ இல்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் அவர்கள் தெரிவித்தார் .
திருகோணமலை மாவட்ட கன்னியா மாங்காயூற்று கிராமத்தில் உள்ள பெண்தலைமை தாங்கும் குடும்ப பெண்களிக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன்அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 06 குடும்பங்களுக்கான ஆடு வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படத்தியுள்ளார் ஆடுகளை கையளிக்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு 09 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை கன்னியா மாங்காயூற்று கிராமத்தில் இடம் பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது உரையாற்றிய கிழக்க மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக பாராளுமன்றம் மற்றும் மாகாணசபைகளில் ஒதுக்கீடு செய்யபட்டுள்ள நிதிகள் போதுமானதாக இல்லை .வடகிழக்கில் யுத்தத்திற்கு பின்னரான இன்றைய சூழலில் பல்லாயிரக் கணக்கா பெண்கள் உழைப்பாளிகளான தமது கணவன்மார் மற்றும் சகோதர்களை இழந்தள்ளமையால் இவர்களின் வாழ்வாதாரம் இன்று பெரும் கேள்விக்குறியாகவுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு 2015 க்கான வரவு செலவு திட்டத்திலும் கூட இப் பெண் தலைமையிலான குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடர்பாக அரசாங்கத்தால் விசேட ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதாக தெரியவில்லை எனவே இவர்களுக்கான விசேட கவனத்தை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
அப்போது தான் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தினை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்விற்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள உதவிப் பணிப்பாளர் டாக்கடர்.பி.புவனேந்திரன் மற்றும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மைய உத்தியோகத்தர் வ.ராஜ்குமாா் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கி.மா.சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனனால் வாழ்வாதார திட்டங்கள்.
byRajkumar
-
0