கிழக்கு மாகாணசபை எதிர்கட்சி தலைவரால் அன்புவழிபுரத்தில் நுாலகம் திறப்பு விழா

அன்புவழிபுரம் அன்பு சனசமூக நிலையத்தினரால் அன்பு அறிவக திறப்புவிழா நிகழ்வானது கிழக்கு மாகாணசபை எதிர் கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி அவர்களால் இன்று 08.11.2014 காலை 10 மணியளவில் இடம் பெற்றது. கிழக்கு மாகாணசபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியான ரூபாய் 50 ஆயிரம் நிதியில் புதிய நுால்கள் இடப்பட்டு புனரமைக்கபட்டு திறப்புவிழா கண்ட இந்த நிகழ்விற்கு அன்பு வாசகர் வட்ட தலைவர் து.தனராஜ் அவர்களின் தலைமை தாங்கினார். விருந்தினர்களாக கிழக்கு மாகணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்தனன் மற்றும்திருகோணமலை நகரசபையின் உப தலைவர் சிறீஸ்கந்தராஜா மற்றும் கிராம சேவகர்களின் நிர்வாக உத்தியோகத்தர் இ.அருந்தவச்செல்வம் மற்றும் கலைமகள் மகாவித்தியாலய அதிபர் க.ரவிதாஸ் அன்புவழிபுரம் கிராம உத்தியோகத்தர் அ.சிவானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நுாலகமானது கடந்த காலங்களில் தினசாி நாளிதழ்கள் மட்டுமே கிரமாக போடப்பட்டு வாசகர்களின் தேவையை பூர்த்தி செய்யபட்டு வந்தது இனி வரும் நாட்களில் நுால்கள் இரவல் பகுதி மற்றும் நுால் வாசிப்பு பகுதிகள் என்பன இடம் பெறவுள்ளது.இச் சேவைகள் பெரும்பாலும் சாதாரண தர மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களை ஊக்குவிக்கும் என நுாலக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.​

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post