சல்லி அம்பாள் மகா வித்தியாலயத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்...

தி/சல்லி அம்பாள் மகாவித்தியாலயத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் நேற்று (08-11-2014) இடம்பெற்றது..இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன்,, கௌரவ விருந்தினராக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன்,, சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக் கழக திருகோணமலை வளாக சிரேஷ்ட உதவி நூலகர் திருமதி விஜயலஷ்மி சுதாகரன். ஆகியோர் கலந்து கொண்டனர்.. பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டன.. தி/சல்லி அம்பாள் மகாவித்தியாலயத்தில் இருந்து புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்தும் கெளரவிக்கப்பட்டது.. மேலும் சல்லி அம்பாள் ஆலய நிர்வாகத்தினரால் பாடசாலை நூலகத்திற்கு நூல்கள் சில அன்பளிப்பு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.. இப்பகுதியின் கிராம உத்தியோகத்தர் , சிறுவர் நன்னடத்தை அதிகாரி, சம்பல்தீவு பொது நூலகத்தின் நூலகர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மகளிர் கிராம அபிவிருத்து சங்க நிர்வாகத்தினர்,சல்லி அம்பாள் ஆலய நிர்வாகத்தினர், பெற்றோர்கள் ,மாணவர்கள், என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு பாடசாலையின் நூல்கள் காட்சிப்படுதப்படிருந்தமை சிறப்பம்சமாகும்..

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post