மாசி 25 ம்திகதி அன்று மாவட்ட ரீதியாக அமரா குடும்ப தலைமைப் பெண்கள் ஒன்றியத்திற்கான கலந்துரையாடல் காலை 9.30 மணியளவில் விழுது அலுவலகத்தில் ஆரம்பமாகியது.
இதில் குடும்ப தலைமை தாங்கும் பெண்கள் 2014 ம் ஆண்டு தாங்கள் செய்யவிருக்கும் செயற்பாடுகள் பற்றியும் தமது இலக்கு நோக்கம் மற்றும் மாா்ச் 08 மகளீா் தினம் கொண்டாடுதல் தொடா்பாகவும் பேசப்பட்டதுடன் தாம் சுயதொழிலில் ஈடுபடுவதற்கான ஓா் வழிகாட்டலினையும் பெற்றுக் கொண்டதுடன் இவா்களுக்கு சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கி வரும் உதவியினை பெறும் வழியினை விளக்கி இவ் உதவித்திட்டத்தினை பெறுவது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.