திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தில் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமானது கடந்த 10ம் திகதி ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
வலயக் கல்விப் அலுவலகத்தின் முறைசாரா கல்விப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் க.அகிலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை லயன்ஸ் கழக ஜிங்கோ கிளையின் செயலாளர் தர்மலிங்கம் கணேஷ் மற்றும் எழுத்தாணி பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் வடமலை ராஜ்குமார் ஸ்ரீ மாதுமை அம்பாள் வித்தியாலயத்தின் அதிபர் என்.இலங்கேஸ்வரன் ஆகியோருடன் விசேட கல்விப் பிரிவின் ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.