(அ.அச்சுதன் ) நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தினால் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான சிந்தனை சித்திரங்கள் உள்ளடங்கிய நிகழ்நிலைக் கண்காட்சி கடந்த அக்டோபர் 05ம் திகதி எழுத்தாணி பவுண்டேஷன் நிறுவனத்தால் நடாத்தப்பட்டது.
https://www.artsteps.com/view/66ff9206dcb4d92d6d28ebbe
இக்கண்காட்சியில் காண்பிக்கப்பட்ட சிந்தனைச் சித்திரங்கள் மற்றும் சுவரொட்டிகள் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாக நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் திருகோணமலை மாவட்ட மற்றும் தேசிய ரீதியாக கலந்து கொண்ட ஊடகவியலாளர்களின் எண்ணக்கருவில் உருவான சித்திரங்களை நிபுணத்துவம் பெற்ற ஓவியர்களுடாக வடிவமைத்து அவற்றை இந்த நிகழ்நிலைக் கண்காட்சியில் வைத்துள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் குற்றங்கள் மற்றும் இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளை வெளிக் கொணரும் டிஜிட்டல் ஊடக செயற்பாட்டாளர்களின் செயற்பாட்டுக்கு தடை விதிக்கும் சட்டமாக இச்சட்டம் காணப்பட்டது.
தற்போதைய இலஞ்ச ஊழலற்ற ஆட்சியில் இச்சட்டம் அவசியமா? என்ற கேள்வி பல தரப்பினரிம் எழுந்துள்ளது.
இச்சட்டம் தொடர்பாக புதிய பாராளுமன்றமும் ஆட்சி அமைக்க உள்ள அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க இக கண்காட்சியானது வழுச் சேர்க்கின்றது என இதனை பார்வையிட்ட பலரின் கருத்துக்கள் இருந்தது.
எனவே காலத்திற்கு ஏற்ற செயற்பாடாக இக் கண்காட்சி அமைகின்றது.