விருட்சம் மின்னிதழ் சஞ்சிகை திருகோணமலையில் வெளியீடு...!

( சேனையூர் நிருபர் ) தளம்" அமைப்பின் குரலாக, அதே சமயம் திருக்கோணமலையில் நீண்ட நாட்களாக காணப்படும் "திருமலை மண்ணின் வெளியீடு" என்ற இடைவெளியை நிரப்பும் நோக்குடனும் மாதாந்த இதழாக "விருட்சம்" எனும் சஞ்சிகை நேற்றய தினம் (01) மாலை 5.00 மணியளவில் தளம் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போது திருக்கோணமலையை சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் கலை இலக்கியம் சார்ந்தோர், சமூக நலன் விரும்பிகள், தளத்தின் துகிர், கீற்றுக்கள், தளிர் போன்ற செயல்திட்ட உறுப்பினர்கள் என பலர் பங்கு கொண்டிருந்தனர். முற்றுமுழுதாக இளையோரின் கைவண்ணத்தில் "விருட்சம்" சஞ்சிகை வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post