வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பத்தினிபுரம் மக்களுக்கு நலன்புரிச் சங்கத்தால் உதவிகள்

கனத்த மழையின் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கபட்டு பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் தம்பலகாமம் கோட்டத்தில் உள்ள பத்தினி புர மக்களுக்கு, தம்பலகாமம் பிரதேச செயலாளர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தம்பலகாமக் கோட்டத் தலைவர் திரு.விஜய்குமார் ஆகியோரது வேண்டுகோளுக்கு இணங்கத் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இதனைத் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் மற்றும் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை சிவானந்தன் ஆகியோர் 2024/01/10 ஆம் நாள் காலை ஒன்பது மணிக்கு வழங்கினர். பிரதேச செயலாளர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தம்பலகாமக் கோட்டத் தலைவர் திரு.விஜய்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post