(சேனையூர் நிருபர்)
திருகோணமலையில் அமைந்துள்ள கேம்பிறிட்ச் சர்வதேச பாடசாலையின் 2023 / 2024 ஆம் ஆண்டுக்கான ஒன்று கூடல் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் நேற்று சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் மண்டபத்தில் கேம்பிறிட்ச் சர்வதேச பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்றதது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி
பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகன கலந்து கொண்டார்.
கெளரவ அதிதிகளாக முன்னால் ஜோர்தான் நாட்டுக்கான இலங்கை தூதுவர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.லாபிர், திருகோணமலை கடற்படை கடற்படை கல்லூரியின் கொமான்டர் கொரா ரதோர்வும் ,
சிறப்பு அதிதிகளாக திருகோணமலை பொது வைத்திய சாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகாரி இளங்கோவன் செந்தூரனும் ,வணக்கத்துக்குரிய எஸ்.டபிள்யூ தேவகுமார் அவர்கலும் நிலாவெளி வைத்திய சாலையின் வைத்தியர் மேகலா அருன்மாறன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்கப்படுவதையும் , மாணவர்களின் கலை நிகழ்வுகளையும் மாணவர்களுக்கான சான்றிதழ் , நினைவுச் சின்னங்கள் அதிதிகளால் வழங்கப்படுவதையும் கலந்து சிறப்பித்தவர்களையும் காணலாம்.
கேம்பிறிட்ச் சர்வதேச பாடசாலையின் ஒன்று கூடல் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்..!
bytrinco mirrer
-
0