தெற்காசிய போட்டியில் உவர்மலை விவேகானந்தா கல்லுாரி சாதனை

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி 08 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று 16ம் திகதி இடம்பெற்றது. கல்லூரி முதல்வர் க.ரவிதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு உட்துறைமுக வீதியில் உள்ள சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து பேன்ட் வாத்தியத்துடன் அவர்களை அழைத்து வந்து மாலை அனுபவித்து கௌரவித்தல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இரண்டு பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று பாராட்டினார்கள். உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது முறையாக இம்மாதம் கடந்த 14,15 ம் திகதிகளில் கொழும்பு றோயல் மாஸ் அரேனா அரங்கில் வெகு பிரமாண்டமாக இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின் முடிவில் உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் எட்டு (8) தங்கம், எட்டு (8) வெள்ளி, ஐந்து (5) வெண்கலம் உள்ளடங்கலாக இருபது (21) பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர். பதக்கங்களைப் பெற்ற வர்களின் விபரம் தொடு சிலம்பம் பிரிவு உ.பவிகாஷ் – 1ம் இடம் தங்கப்பதக்கம் சு.சுபீட்சகன் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம் ச.கோபிகா – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம் ச.சந்தோஷ் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம் வி.கேஷிகன் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம் ர.ஷாம் டேவிட் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம் கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம் ஒற்றைச் சிலம்பம் பிரிவு சு.சுபீட்சகன் -1ம் இடம் தங்கப்பதக்கம்
ச.கோபிகா - 1ம் இடம் தங்கப்பதக்கம் வி.கேஷிகன் - 2ம் இடம் வெள்ளி பதக்கம் ர.ஷாம் டேவிட் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம் உ.பவிகாஷ் - 2ம் இடம் வெள்ளிப்பதக்கம் ச.சந்தோஷ் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம் கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம் வேல் கம்பு பிரிவு வி.கேஷிகன் – 1ம் இடம் தங்கப்பதக்கம் ச.சந்தோஷ் – 1ம் இடம் தங்கப்பதக்கம் சு.சுபீட்சகன் -1ம் இடம் தங்கப்பதக்கம் ச.கோபிகா - 1ம் இடம் தங்கப்பதக்கம் ர.ஷாம் டேவிட் – 1ம் இடம் தங்கப்பதக்கம் உ.பவிகாஷ் – 2ம் இடம் வெள்ளிப்பதக்கம் கு.தருஷன் – 3ம் இடம் வெண்கலப்பதக்கம்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post