இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கொவிட் 19 இன் தாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்வர்களுக்கு வாழ்வாதரமும் உணவு நிலைபேறு தன்மையும் எனும் திட்டத்தின் பல்வேறு வகையான வாழ்வாதார செயற்பாடுகளை அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கும்புறுப்பிட்டி வடக்கு, கும்புறுப்பிட்டி தெற்கு மற்றும் கும்புறுப்பிட்டி கிழக்கு ஆகிய 03 கிராமங்களிலுள்ள 48 பயனாளிகளுக்கு மஞ்சல்,இஞ்சி, நிலக்கடலை மற்றும் உழுந்து போன்ற வாழ்வாதார ஊக்கவிப்பு இன்று (23.10.2020) வழங்கப்பட்டது.
மேலும் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேரமடுவ எனும் கிராமத்திலுள்ள 30 பயனாளிகளுக்கும் மஞ்சல் மற்றும் இஞ்சி செய்கைக்கான ஊக்குவிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது கந்தளாய் மற்றும் குச்சவெளிப் பிரதேச செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும் அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் உதவி இணப்பாளர் திரு.அ.மதன் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.