திருகோணமலை பிரதேசத்தில் ஆறு பேர் கொரோனா தொற்றாளிகளாக இனங்காணப்பட்ட நிலையில் தேவையற்ற முறையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது மற்றும் பயணிப்பது போன்றவற்றை தவிர்த்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம்,கல்மெட்டியாவ,புல்மோட்டை,குச்சவெளி மற்றும் திருகோணமலை பிரதேசத்தை அண்மித்த கிராம சேவகர் பிரிவுகளான அபயபுரம்,அரசடி,சுமேதகம ஆகிய கிராமங்களில் உள்ளவர்களே இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே மக்கள் நடமாட்டத்தை தவிர்த்து இக்கிராமங்களுக்குள் உள்நுழைவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதார பகுதியினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான முதலாவது நபர் புல்மோட்டை, குச்சவெளி பிராந்திய சுகாதார அத்தியட்சகர் பிரிவைச் சேர்ந்தவர் எனவும், இவர் கொழும்பு - பேலியகொடை பகுதிக்கு சென்றதையடுத்து தொற்றுக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதேசத்தில் 61 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,தேவையற்ற முறையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது மற்றும் பயணிப்பது போன்றவற்றை தவிர்த்துகொள்ளுமாறும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது, களியாட்டங்களை தவிர்த்துக்கொள்வது முக்கியமான நன்று