அபாயகரமான நிலையில் 03 மாவட்டங்கள்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு மாட்டத்தின் ஏழு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 19 பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுகளும் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் நுகேகொட, பத்தரமுல்ல, கொலொன்னாவ, கஹத்துடுவ, மொரட்டுவ, கடுவலை ஆகிய மாநகரசபைப் பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில், ராகம, வத்தளை, திவுலப்பிட்டிய, ஜாஎல, ஏக்கல, கட்டான, சீதுவ, கம்பஹா, அத்தனகல்ல, வெயாங்கொட மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்கள் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் மத்துகம மற்றும் வாத்துவ ஆகிய பிரதேசங்கள் கொரோனா வைரஸ் அதிகம் பரவிவரும் அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மேற்படி மாவட்டங்களின் 27 சுகாதார பிரிவுகள் அதி அவதான வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post