திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜத்தின் ஏற்பாட்டில் 25.10.2014 அன்று காலை 10 மணியளவில் திருகோணமலை 3ம் கட்டை சந்தியில் இருந்து உப்புவெளி பிரதேச சபை வரை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம் பெற்றது
.இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தின் கருப் பொருளாக துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோர் எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதாகும்.
இந்நிகழ்வில் பெண்கள் சமாஜத்தின் தலைவி எமலின் ராகல் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருச்செந்தில் நாதன் அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றிய தலைவி தி. ரீட்டாமலர் பட்டினமும் சூழலும் பெண்கள் வலையமைப்பின் தலைவி மற்றும் பாடசாலை மாணவர்கள் சட்டத்தரணிகள் பாடசாலை அதிபர்கள் தொண்டர் நிருவன பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் இளைஞர் கழக பிரதிநிதிகள் என பலர் கலந்கொண்டிருந்தனர்.
அத்துடன் இந்த ஊர்வலமானது உப்புவெளி பிரதேச சபையின் கேட்போர் கூடத்திற்கு சென்றடைந்து பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவ்வாறான சிறுவர் துஸ்பியோகங்களில் இருந்து தமத சிறார்களை எவ்வாறு பாதுகாக்கலாம் எனும் அறிவுரைகள் வலங்கப்ட்டது .
இதில் சட்டத்தரணி தி.திருச்செந்தில்நாதன் அவர்கள் தற்போது துஸ்பிரயோகங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான நடைமுறையில் எள்ள சட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் வலங்கியிருந்தார் மற்றும் உப்புவெளி பொலிஸ் பிரிவின் சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தமக்கு அன்றாடம் கிடைக்கும் குற்றச் செயல்கள் மற்றும் அதற்கான அறிவுரைகள் தொடர்பாகவும் கருத்துரைகள் வழங்கப்ட்டது.
தொடர்ந்து சட்டங்கள் எவ்வாற கடுமையாக்கப்பட வேண்டும் எண்றும் வருகை தந்த பிரதிநிதிகளின் ஆலாசனை பெறப்பட்டு தொகுக்கப்ட்டது இந்த ஆலாசனைகள் சம்மந்தப்ட்ட அமைச்சுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள் தெரிவித்தார்கள்.
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கான தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் -திருமலை பெண்கள் சமாஜம் விழிப்புணர்வு ஊர்வலம்...
byRajkumar
-
0