நிலாவெளியூர் கெஜதர்மா எமுதிய அந்த மூன்று நாட்கள் குறு நாவல் வெளியீட்டு விழா 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டன் மண்டபத்தில் கவிஞர் க. கோணேஸ்வரன் தலைமையில் இடம் பெறவுள்ளது.
இந்த விழாவில் வரவேற்புரையை நீங்களும் எமுதலாம் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் வழங்க, வாழ்த்துப் பாவினை கவிதாயினி சிவரமணி வழங்க, நூல் அறிமுக உரையை இலக்கிய ஆர்வலர் ஆ. ஜெகசோதியும், நயஉரையை எமுத்தாளர் எம்.எஸ்.எம். நியாஸ் அவர்களும் விதந்துரையை எமுத்தாளர் க. தேவகடாட்சமும், வாசகனுரையை ஜீலியன் புஸ்பராஜாவும் வழங்குவார்கள்.
இவ் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக இலக்கிய ஆர்வலர் ஆறுமுகம் ஜெகசோதியும், கெளரவ அதிதியாக மூத்த எமுத்தாளர் ச.அருளானந்தமும், சிறப்பு அதிதிகளாக இலக்கிய நேசர் திருச்செந்தில் நாதன், கவிஞர் கெ. சித்திரவேலாயுதன், எமுத்தாளர் வி.என். சந்திரகாந்தி உட்பட மற்றும் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.