ஓய்வு பெறுகின்றார் வி . பாக்கிய ராசா அதிபர் அவர்கள்

திருகோணமலை மாவட்ட மூதூர் கிழக்கு பள்ளிக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் சேனையூரை வசிப்பிடமாகவும் கொண்ட வி. பாக்கிய ராசா அதிபர் . அமரர்களான வினாயகமூர்த்தி காளியாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வராவார் ஆரம்ப கல்வியை தி/ மூ /கலைமகள் இந்துக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை தி/மூ /அல்ஹம்றாம கல்லூரியிலும் உயர் கல்வியை தி /மூ /சேனையூர் மத்திய கல்லூரியிலும் பட்ட கல்வியை கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கற்று ஆசிரியராக தி /மூ/ நல்லூர் வித்தியாலயத்தில் முதல்நியமனம் பெற்று பின் தி/ மூ/ ஸ்ரீ கணேச வித்தியாலயம் தி/ மூ/ கலைமகள் இந்துக் கல்லூரி தி /மூ/ ஸ்ரீ சண்பக மகா வித்தியாலயத்திலும் நிறைவில் தி /மூ /சின்னக் குளம் வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்தார் 01 .12 .2007 முதல் தி /மூ/ கலைமகள் இந்துக் கல்லூரியில் அதிபராக கடமை ஏற்று 08 .08 .2012 ஆம் திகதி பதவி உயுர்வு பெற்று தரம் 2 அதிபராகநியமனம் பெற்றார். ஆசிரியராக அதிபராக கடமைபுரிந்து பல ஆசிரியர்களையும் அதிபர்களையும் உருவாக்கியுள்ளார் கல்வித்துறையோடு கலைத்துறையிலும் ஆர்வமுள்ள இவர் கந்த புராணம் பாடுதல் பயன் கூறுதல் என்னும் சமய பணிகளிலும் ஈடுபடும் இவர் 04 .02 .2025 ஆம் திகதி அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post