கிண்ணியா ஆலயத்தில் பரிசளிப்பு விழா

தம்பலகாமம் நிருபா் திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஆலங்கேணி அருள்மிகு விநாயகர் கோவில் பூங்காவனத் திருவிழா 2024/02/24 ஆம் நாள் அன்று நடைபெற்றது. இக் கோவில் திருவிழாவை ஒட்டி கிண்ணியா பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளில் பயிலும் மாணவரிடையே பேச்சு, கவிதை, கட்டுரை, நாடகம், நடனம் முதலிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி வைத்தார். அத்துடன் மேற்படி திருவிழாவை சிறப்பான முறையில் நடத்திய சைவ குருமாரையும் கௌரவித்தார். கவிஞர் கௌரிராஜன் தலைமையில் இவ்விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post