தி/தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியானது திருகோணமலை வலயத்தில் சாதனை படைக்கும் பாடசாலைகளுள் பிரதானமானதாகும். அந்த வகையில் இம்முறை நடைபெற்ற அகில இலங்கை தமிழ்மொழித்தினம் - 2023 ல் பிரிவு 4ல் தனிநடனத்தில் தி/தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியை சேர்ந்த மாணவி செல்வி. யதுசிகா ராஜ்மோகன் 2ம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இம் மாணவியை கௌரவிக்கும் நிகழ்வு 6ம் திகதி அன்று கல்லூரியின் முதல்வர் திரு.க.ரவிதாஸ் தலைமையில், மாலைகள் அணிவித்து பாடசாலை வீதியின் ஆரம்பத்தில் இருந்து பேன்ட் வாத்திய குழுவினருடன் அழைத்துவரப்பட்டனர். இந் நிகழ்விற்கு வலயககல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.சி.தவநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்ததோடு மாணவியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நடன ஆசிரியர் திருமதி.C.சுபானி அவர்களையும் திரு.ச.ரோகனபிரசாந் அவர்களையும் பாடசாலை நிர்வாகம் சார்பாக கௌரவித்து பாராட்டினர்
அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் தி/தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவி சாதனை
bytrinco mirrer
-
0