(அ . அச்சுதன்)
திருகோணமலை எகெட் கறித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கறித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் கிராம மட்டத்திலான சிறுவர்கள், இளையோர்கள் மற்றும் கிராம மட்டத்திலான பெரியவர்கள்,அருட்சகோதரிகள், மற்றும் சமூக பங்காளர்கள் இணைந்து உப்புவெளி பிரதேசத்தில் உள்ள கடற்கரையை சிரமதானப்பணி நடைபெற்றது.
இதில் 200 கும் அதிகமானோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்ட தக்கது.
இவ் நிகழ்வு எகெட் கறித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி.கலாநிதி B.போல் றொபின்சன் அவர்களின் தலைமையிலும் எகெட் கறித்தாஸ் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,மற்றும் நிறுவனத்தின் அனைத்து உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.