(ரஜீந்திரமூர்த்தி)
வெளி வலயத்தில் கடமையாற்றும் ஐந்து தொடக்கம் எட்டு வருட ஆசிரிய சேவையை பூர்த்தி செய்தும் இன்று வரைக்கும் அதே பாடசாலையில், தூரப் பிரதேசத்தில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பணிபுரியும் ஆசிரியர்கள் இன்று (02) காலை 8.30ணிக்கு திருகோணமலை உவர்மலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக கண்டனப் பேரணி நடாத்தினார்கள்.
இவ் இடமாற்றம் உரிய நேரத்தில் செயற்பாடாதன் விளைவாக தமக்கு அநீதி இளைக்கப்படுதாகவும். திட்டமிட்ட இச் செயற்பாட்டினை இடைநிறுத்திமையினால் தாங்கள் தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் பணியாற்றவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும்,தெரிவிக்கின்றனர்.
எனவே தீர்மானிக்கப்பட்ட இடமாற்ற செயற்பாட்டினை பாரபட்சமற்ற முறையிலும் அரசியல் செல்வாக்கு களுக்கு அப்பால் நடைமுறைப்படுத்தக்கோரி இப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
இடமாற்ற சேவைக்காலம் நிறைவடைந்தும் , மாற்றம் கிடைக்காத துாரப் பிரதேச ஆசிரியர்கள் கண்டனப் பேரணி..!
bytrinco mirrer
-
0