சர்வதேச சிறுவர் தின நிகழ்ச்சி குச்சவெளியில்

 


திருகோணமலை மாவட்ட சர்வதேச சிறுவர்தின நிகழ்வுகளின் பிரதான நிகழ்வு இன்று குச்சவெளி சலப்பையாறு சமூக பராமரிப்பு நிலையத்தில்  மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.


குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட சில முன்பள்ளி மாணவர்களுடன் விசேட தேவையுடையவர்களையும் இணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்கள் தமது திறன்களை சிறப்பாக வெளிக்கொணர்ந்தனர்.

சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டு இவ்வைபவம் சிறிதாக காணப்பட்டாலும் சிறுவர்களது பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பெரியவர்களை அறிவுறுத்தல் வேண்டும்.சிறுவர்களை பாதுகாப்பதற்காகத்தான் சிறுவர்கள் தினம் மற்றும் ஏனைய சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிறுவர் பெறுமதிமதிக்கமுடியாத சொத்தாகும். நாளைய உலகை பாரம் எடுக்கவுள்ளவர்கள்.அவர்களை சரியான முறையில் நெறிப்படுத்தும் போது சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள். சிறுவர்களது நலன் தொடர்பில் பல நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.அனைவரது நோக்கமும் சிறுவர்களை நற்பிரஜைகளாக கொண்டு வருவதே.இதற்காக நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும் என்று இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன்,குச்சவெளி பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், குச்சவெளி உதவி பிரதேச செயலாளர் ,மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திருமதி சுகந்தினி,  உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post