சூறாவளி முன்னெச்சரிக்கை காரணமாக திருகோணமலையில் கிழக்கு கடற்கரையில் கடற்றொழிலில் ஈடுபடும் 5200 படகுகள் கடலுக்கு செல்லவில்லை இதனால் அவர்களின் அண்றாட பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நிற்கின்றனர். என திருகோணமலை மாவட்ட மீனவர் அமைப்பின் செயலாளர் கா.கோகுல்ராஜ் தெரிவித்தார்.
இது இன்று (01.12.2016) திருக்கடலூர் கிராமத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தொடரந்து கூறும்போது
ஒவ்வொரு ஆண்டும் மாரி காலத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக நேரடியாக அதனை நம்பி வாழ்க்கை நடாத்தும் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அன்றாட வருமானத்தை நம்பி தமது வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டிவரும் பெரும்பாலான மீனவர்கள் இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு நிற்கின்றனர்.
இம் மீனவர் பிரச்சினை தொடர்பாக பல தடவைகள் அரசாங்கத்திற்கு விசேட திட்டங்களை நாம் முன்மொழிந்த போதும் அந்த முன்மொழிவுகள் பரீசிலிக்கப்படாததுதான் இன்றைய நிலைக்கு காரணம்.
இவ்வாறான அனர்தத்தின் போது ஏற்படும் பொருளாதார சிக்கல் அவர்களுடைய அன்றாட உணவுத் தேவை முதல் மாணவர்களின் கல்வி மற்றும் அத்தியாவசிய ஏனைய தேவைகள் வரை தாக்கம் செலுத்தகிறது.
எனவே இவ்வாறான விடங்கள் தொடர்பாக அரசு இனியாவது விசேட திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
சூறாவளி முன்னெச்சரிக்கை - திருமலையில் 5200 படகுகள் தொழிலுக்கு செல்லவில்லை
byRajkumar
-
0